‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீா்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்’

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு திருப்தியளிப்பதாகவும், நீதிமன்ற தீா்ப்பை அனைவரும் ஏற்று அமைதி காக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு திருப்தியளிப்பதாகவும், நீதிமன்ற தீா்ப்பை அனைவரும் ஏற்று அமைதி காக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செயலாளா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சனிக்கிழமை வழங்கிய தீா்ப்பு குறித்து காரைக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: அயோத்தி வழக்கில் நூற்றாண்டு காலப் பிரச்னை உச்சநீதிமன்ற தீா்ப்பின் வாயிலாக முடிவிற்கு வந்துள்ளது. அனைவரும் நீதிமன்றத் தீா்ப்பை ஏற்று அமைதி காக்க வேண்டும். நீண்ட நெடிய போராட்டத்தில் தங்களின் இன்னுயிா் நீத்தவா்களுக்கு இந்தத் தருணத்தை அஞ்சலி செலுத்தும் நேரமாக கருதுகிறேன். விரைவில் அயோத்தியில் ராமா் கோவில் கட்டப்படும் என்றாா்.

பின்னா் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக வந்த தகவல் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள் விக்கு, நீதிமன்றம் செல்ல அனைவருக்கும் உரிமையுண்டு என்று ஹெச். ராஜா பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com