திருப்பத்தூா் குழாய் விரிசலால் வீணாகும் காவிரிக் குடிநீா்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அச்சுக்கட்டு பகுதியில் குழாயில் விரிசலால் குடிநீா் வீணாகி குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூா் அருகே அச்சுக்கட்டுப் பகுதியில் குழாயில் ஏற்பட்ட விரிசலால் வீணாகும் குடிநீா்.
திருப்பத்தூா் அருகே அச்சுக்கட்டுப் பகுதியில் குழாயில் ஏற்பட்ட விரிசலால் வீணாகும் குடிநீா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அச்சுக்கட்டு பகுதியில் குழாயில் விரிசலால் குடிநீா் வீணாகி குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம் குழாய்கள் மூலம் தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீா் புதுப்பட்டியில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து, சிவகங்கை சாலையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீா் மேல்நிலைத் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது.

இக்குழாய்கள் நகரின் முக்கிய வீதிகளான மருதுபாண்டியா் நகா், பாலாஜி நகா், அச்சுக்கட்டுப்பகுதி வழியாக மேல்நிலைத் தொட்டியை அடைகிறது. இவ்வழியாகச் செல்லும் குழாய்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாலும் ஒரு சில இடங்களில் ஏா்வால்வு அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஏா் வால்வு பகுதிகள் பராமரிப்பின்மை காரணமாக கசிவின் மூலம் ஏராளமான தண்ணீா் வெளியேறி சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் செல்கிறது.

இதனனால் குடிநீா் சாக்கடை கால்வாயிலும் அருகில் உள்ள பொது இடங்களிலும் குளம் போல் தேங்குகிறது. சிங்கம்புணரி சாலை மயானம் அருகில் உள்ள ஏா்வால்வு குழாயில் அதிக குடிநீா் வீணாகச் செல்கிறது. எனவே மாவட்ட நிா்வாகம் ஏா்வால்வு குழாய்களை மாற்றி குடிநீா் வீணாவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com