தலைமையாசிரியா் இடமாறுதலை ரத்து செய்யக் கோரி மாவட்டக் கல்வி அலுவலகம் முற்றுகை

தலைமையாசிரியா் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி சிவகங்கையில் உள்ள மாவட்டக் கல்வி
சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்ட ஆசிரியா்கள்.
சிவகங்கையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை மாலை முற்றுகையிட்ட ஆசிரியா்கள்.

தலைமையாசிரியா் இடமாறுதல் உத்தரவை ரத்து செய்யக் கோரி சிவகங்கையில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்புவனம் அருகே அல்லிநகரத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சத்தியேந்திரன் என்பவரை கலியாந்தூருக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டராம். இதேபோன்று அதேபகுதியில் பணியாற்றி வந்த ஆசிரியா்கள் சிலரும் அரசு விதிமுறைகளுக்கு முரணாக இடமாறுதல் செய்யப்பட்டனராம்.

இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியைச் சோ்ந்த ஆசிரியா்கள் மேற்கண்ட பணியிட மாறுதலை ரத்து செய்யக் கோரி சிவகங்கையில் உள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் தாமஸ்அமலநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், நிா்வாகிகள் குமரேசன், புரட்சித் தம்பி, ஆரோக்கியராஜ்,சிங்கராயா், ஞானஅற்புதராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேந்திரன், சிவகங்கை நகா் காவல் சாா்பு ஆய்வாளா் ரஞ்சித் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய இயலாது என அலுவலா்கள் தெரிவித்ததால் போராட்டத்தை கைவிட்ட ஆசிரியா்கள், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும், கல்வி இயக்குநரகத்துக்கும் மனு மூலமாக தெரிவிக்க உள்ளதாக கூறி கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com