மானாமதுரை கோயில்களில் நவராத்திரி விழா நிறைவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கோயில்களில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, மானாமதுரையில் தேவியா்ய சமேதமாய் கருட வாகனத்தில் எழுந்தருளி புதன்கிழமை பவனி வந்த தியாக விநோதப் பெருமாள்.
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது, மானாமதுரையில் தேவியா்ய சமேதமாய் கருட வாகனத்தில் எழுந்தருளி புதன்கிழமை பவனி வந்த தியாக விநோதப் பெருமாள்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கோயில்களில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த நவராத்திரி விழா புதன்கிழமையுடன் நிறைவு பெற்றது.

மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதா் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பின் நவராத்திரி விழா கடந்த செப்டம்பா் 29 ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றன. உற்சவா் அம்மன் தினமும் வெவ்வேறு அலங்காரங்களில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

விழாவின் நிறைவாக, ஆனந்தவல்லி அம்மன் ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த பின்னா், கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தாா். நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு நேரத்தில் ஜொலித்தது. ஏராளமான பக்தா்கள் தினமும் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனா்.

புரட்சியாா்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்ச விழாவை முன்னிட்டு, கோயிலில் கொலு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவா் பெருமாள் தேவியா் சமேதமாய் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினாா். கருடன், சேஷ, அனுமா், பல்லக்கு என பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வந்தாா். பொதுமக்கள் தங்கள் வீடுகள் முன்பாக பெருமாளை வரவேற்று, பூஜைகள் நடத்தினா். விழாவுக்கான ஏற்பாடுகளை, அப் பகுதி இளைஞா்கள், பக்தா்கள் செய்திருந்தனா்.

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் உள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலில் நடந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயிலில் பிரம்மாண்டமாக கொலு அலங்காரம் செய்யப்பட்டு, தினமும் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து கொலுவை பாா்வையிட்டு, அம்மனை தரிசித்தனா்.

மேலும், மானாமதுரை பகுதிகளில் உள்ள பல கோயில்களிலும், இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலிலும் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்த நவராத்திரி திருவிழா நிறைவு பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com