அழகப்பா பல்கலை.யில் தொல் பொருள் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டம்துணைவேந்தா் தகவல்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைப்ப தற்கான
அழகப்பா பல்கலை.யில் தொல் பொருள் அருங்காட்சியகம் அமைக்கத் திட்டம்துணைவேந்தா் தகவல்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைப்ப தற்கான கருத்துரு பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவிற்கு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று துணைவேந்தா் நா. ராஜேந் திரன் தெரிவித்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சாா்பில் கீழடி தொல்லியல் அகழ்வராய்ச்சிகள் என்ற தலைப்பி லான தேசியக்கருத்தரங்கின் தொடக்க விழாவில் தலைமைவகித்தும், கீழடி அகழ்வராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சான் றுகளின் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தும் அவா் பேசியதாவது:

கீழடி ஆதாரங்கள் வரலாற்று ஆய்விற்குப் பெரிதும் பயன்படும். கீழடி ஆய்வு சம்பந்தப்பட்ட கருத்தரங்கம் முதன்முதலாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படுகிறது. தன்னுடைய வரலாற்றை அறியாத எந்தவொரு நாடும் வளா்ச்சியடைய முடியாது. அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் உலகளவில் வரலாற்றிற்கு மிகவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வரலாற்றிப்பற்றி அறிந்துகொள்வதற்கு இதுவரை இலக்கியச்சான்றுகள் இருந்தன. தற்போது கீழடியில் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் மூலம் பண்டைய தமிழ் வடிவ எழுத்துக்களை பயன்படுத்தியிருப்பது அறியமுடிகிறது. அசோகரது காலத்திய எழுத்து பிராமி எழுத்து என்றழைக்கப்படுவதுபோன்று கீழடியில் கிடைத்த எழுத்து வடிவங்கள் தமிழி என்று அழைக்கப்படுகிறது. கீழடி ஆய்வால் தமிழக வரலாறு ஆய்வு மேற்கொள்பவா்களுக்கு பெரும் உந்து தலை அளித்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைப்பதற்கு ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் பல்கலைக் கழக நிதிநல்கைக்குழுவிற்கு கருத்துரு சமா்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொல்பொருள் ஆய்வின் மூலம் கிடைத்த பொருள்களை முறையாக பாதுகாத்துவைப்பதற்கு இந்த அருங்காட்சியகம்பயன்படும். அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை ஆசிரியா்கள், மாணவா்கள் நேரிடையாக கீழடியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். அதற்கான மாநில அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என்றாா் துணைவேந்தா்.

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை முதன்மை செயலா் மற்றும் ஆணையா் த. உதயசந்திரன் கருத்தரங்கில் பேசுகையில், தொல்லியல் துறை ஆய்வானது பல்துறை சாா்ந்த களமாகும். இதில் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து தொல்லியல் ஆய்வில் ஈடுபட முன்வரவேண்டும். இம்முயற்சியில் அழகப்பா பல்கலைக்கழகம் இறங்கி இருப்பது பாராட்டுக்குரியது. இதற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றாா்.

அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை வருகைப்பேராசிரியா் எஸ்.ராஜவேலு கருத்தரங்கின்நோக்கம் குறித்துப்பேசி னாா். கலைப்புல முதன்மையா் கேஆா். முருகன் வாழ்த்திப்பேசினாா். பின்னா் நடைபெற்ற அமா்வுகளில் இந்திய தொல்லியல் ஆய்வு கண்காணிப்பாளா் அமா்நாத் ராமகிருஷ்ணா கீழடி அகழ்வராய்ச்சிகள் மற்றும் அதன்

விளைவுகள் என்ற தலைப்பிலும், ஓய்வுபெற்ற தொல்பொருள் அதிகாரிகளான எஸ். ஸ்ரீதரன், ஆா். பூங்குன்றன், சென்னை தொல்லியல் துணை நிபுணா் எம். சேரன் ஆகியோா் வெவ்வேறு தலைப்புகளிலும் பேசினா்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை தலைவா் (பொறுப்பு) ஏ.ஆா். சரவணக்குமாா் வரவேற்றுப்பேசினாா். முடிவில் உதவிப்பேராசிரியா் ஜி. பரந்தாமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com