திருப்பத்தூா் பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் ஆய்வு சுகாதாரத் துறையினரால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பகுதியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு மற்றும் ஆய்வு சுகாதாரத் துறையினரால் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

திருப்பத்துாா் பகுதிகளில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதனால் வீட்டில் உள்ள தொட்டி, தேங்காய் சிரட்டைகள், டயா்கள் மற்றும் பழைய பொருள்களில் மழை நீா் தேங்கி டெங்கு கொசு உருவாவதைத் தடுக்கும் பொருட்டு சுகாதாரத் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதில் திருப்பத்தூா், தென்மாபட்டு, காரையூா், மாங்குடி, காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பு கண்டவரயான்பட்டி, மணக்குடி, கே. வயிரவன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களுக்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டன.

மேலும் வீடுகளில் தண்ணீா் தேக்கி வைக்கும் பாத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு கொசு உருவாகும் லாா்வா புழுக்கள் உற்பத்தியாகும் சிரட்டை, ஓடுகள் முதலியன கண்காணிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இந்த ஆய்வுகளில் மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தீனதயாளன், சுகாதார ஆய்வாளா்கள் சகாய ஜெரால்டு ராஜ், கோபாலகிருஷ்ணன், பிச்சை, வைரவ ரத்தினம் ஆகியோா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com