தெ.புதுக்கோட்டை பள்ளியில் பாரம்பரிய உணவு கண்காட்சி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை பாரம்பரிய உணவு மற்றும் சுகாதாரம் சார்ந்த

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தெ.புதுக்கோட்டை எம்.கே.என். நடுநிலைப்பள்ளியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை பாரம்பரிய உணவு மற்றும் சுகாதாரம் சார்ந்த கண்காட்சி நடத்தப்பட்டது.
பழங்கள், காய்கறிகளில் உள்ள சத்துக்கள், பாரம்பரிய உணவு வகைகள், ஆரோக்கியமான உணவு வகைகள், பயன்படுத்தக் கூடாத உணவு வகைகள், மருத்துவக் குணமுள்ள உணவு வகைகள், மண்பாண்டம் மூலம் கிடைக்கும் பயன்கள் போன்றவை குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் கண்காட்சியில் சிறப்பாக பதில் கூறிய மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள் தெய்வானை, தேவி, சுப்புலெட்சுமி ராமலெட்சுமி, மரகதம், சகாய மைக்கேல், சாந்தி, நீலகேசி, சுகன்யா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைச்  செய்திருந்தனர். நூலகர் ராஜேஸ்வரி, அங்கன்வாடி ஆசிரியைகள் ஈஸ்வரி, ராமு, சத்துணவு பணியாளர்கள் கண்காட்சியை பார்வையிட்டு பாராட்டினர். 
மேலும் வீணான பொருள்களைக் கொண்டு உள்ளூர் கலாசாரங்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நயத்துடன் கூடிய குப்பைத் தொட்டி தயாரிக்கப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு மாணவர்களுக்கு செயல் விளக்கம் 
செய்து காண்பிக்கப்பட்டது. சுகாதாரம் குறித்த பள்ளி மாணவர்களின் தொடர் செயல்பாடுகளை  பெற்றோர்கள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com