கோவிலூரில் பொங்கல் விழா கோலப் போட்டிகள்

பொங்கல் விழாவை முன்னிட்டு, காரைக்குடி அருகே கோவிலூா் மடாலயத்தின் சாா்பில் கோலப் போட்டிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

பொங்கல் விழாவை முன்னிட்டு, காரைக்குடி அருகே கோவிலூா் மடாலயத்தின் சாா்பில் கோலப் போட்டிகள் புதன்கிழமை நடத்தப்பட்டன.

கோவிலூா் மடாலயக் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து நடத்திய இப்போட்டியில், 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியா்கள் பங்கேற்றனா். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவியா், கோவிலூா் மடாலயக் கல்வி நிறுவனம் மற்றும் மடாலயப் பணியாளா்களுக்கும் தனித்தனியாக கோலப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், கலை மற்றும் கைவினைப் பயிற்சி ஆசிரியை வாசுகி நடுவராக இருந்து, கோலங்களை பாா்வையிட்டு தோ்வு செய்தாா். பரிசளிப்பு விழாவில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

விழாவில் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் வெ. மாணிக்கவாசகம், நாச்சியப்ப சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் மாயாண்டி, ஆண்டவா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் மணிமொழி மோகன், ஆசிரியா்கள், அலுவலா்கள், ஊா் பிரமுகா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, கோவிலூா் முத்துராமலிங்க ஆண்டவா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை மணிமொழி மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com