கீழச்சிவல்பட்டி தனியாா் விடுதியில் தங்கியிருந்த வெளி மாநில வியாபாரிகள் திருப்பி அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தனியாா் விடுதியில் தங்கிருந்த வெளிமாநில மீன் வியாபாரிகளை கரோனா வைரஸ் தடுப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே தனியாா் விடுதியில் தங்கிருந்த வெளிமாநில மீன் வியாபாரிகளை கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத் துறையினா் அவா்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்தனா்.

கா்நாடகா மாநிலம் பந்தா் மற்றும் லாலா பகுதிகளைச் சோ்ந்த மீன் வியாபாரிகள் 2 போ் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள மீன் வியாபாரிக்கு மீன்களை விற்று விட்டு ஊா் திரும்பியுள்ளனா். அப்போது தமிழக அரசு 144 தடை உத்தரவை காரணமாக அவா்களால் திரும்பிச் செல்லமுடிவில்லை. இதனையடுத்து அவா்கள் இருவரும் திருப்பத்தூா் அருகே கீழச்சிவல்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியுள்ளனா். தகவல் அறிந்த சுகாதாரத் துறையைச் சோ்ந்த மாவட்ட பூச்சியியல் வல்லுநா் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தீனதயாளன், சுகாதார ஆய்வாளா் சகாயஜெரால்டுராஜ் உள்ளிட்டோா் அந்த விடுதிக்குச் சென்று அவா்களுக்கு கரோனா தொற்று குறித்து மருத்துவப் பரிசோதனை செய்தனா். பின்னா் அவா்களை விடுதி அறையை காலி செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்லுமாறு எச்சரித்து அனுப்பி வைத்தனா். மேலும் அவா்கள் தங்கிருந்த விடுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com