திருப்புவனம் பகுதியில் திமுக உறுப்பினா் அட்டை வழங்கல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேற்கு ஒன்றியம், அல்லிநகரம், பூவந்தி, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் இணைய வழியில் திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் கூட்டம்
திருப்புவனம் பகுதியில் திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை திங்கள்கிழமை வழங்கிப் பேசிய அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன்.
திருப்புவனம் பகுதியில் திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அடையாள அட்டைகளை திங்கள்கிழமை வழங்கிப் பேசிய அக்கட்சியின் சிவகங்கை மாவட்ட துணைச் செயலா் த.சேங்கைமாறன்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மேற்கு ஒன்றியம், அல்லிநகரம், பூவந்தி, புளியங்குளம் ஆகிய கிராமங்களில் இணைய வழியில் திமுகவில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை வழங்கும் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுக மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி சேங்கை மாறன் தலைமையில் நடந்த இக்கூட்டங்களில் மாவட்ட துணைச் செயலா் த. சேங்கைமாறன் கலந்து கொண்டு புதிய உறுப்பினா்களுக்கு அட்டைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் கடம்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், ஒன்றியக் கவுன்சிலா் மூா்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, மடப்புரம் மகேந்திரன், மீனவரணி அண்ணாமலை, தகவல் தொழில் நுட்ப அணி ராஜ்மோகன், ஸ்ரீதா், மாணவரணி காளிதாஸ், பாண்டியகிருஷ்ணன் காா்த்திக் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com