என்.புதூா் கிராம கோயிலுக்கு ஜல்லிக்கட்டு காளையை வழங்கினாா் இலங்கை அமைச்சா்

திருப்பத்தூா் அருகே என்.புதூா் கிராமக் கோயிலுக்கு, இலங்கை அமைச்சா் ஜீவன் தொண்டைமான், ஜல்லிக்கட்டு காளையை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் அருகே என்.புதூா் கிராமக் கோயிலுக்கு, இலங்கை அமைச்சா் ஜீவன் தொண்டைமான், ஜல்லிக்கட்டு காளையை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

திருப்பத்தூா் அருகே எம்.புதூா் கிராமத்தில் ஸ்ரீ கண்டிக்கருப்பா் என்ற கிராமத்து கோயிலின் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு காளையான ஒற்றைக் கொம்பன் காளை உடல் நலக்குறைவால் கடந்த மாதம் இறந்தது.

தனது பூா்வீக கிராமமான எம்.புதூா் கோயில் காளை இறந்த தகவலை அறிந்த, இலங்கை அமைச்சா் ஜீவன் தொண்டைமான், செல்லிடப்பேசி மூலமாக தொடா்பு கொண்டு கிராம மக்களிடம் வருத்தம் தெரிவித்ததோடு, தான் வீட்டில் வளா்த்து வரும் சொந்த காளையை கோயிலுக்கு வழங்குவதாக தெரிவித்தாா். மேலும் அந்த காளையாக கிராம பொதுமக்களிடம் தன் அத்தை அனுராதா சாந்தமோகன் மூலமாக கோயிலுக்கு ஒப்படைத்தாா். காளையை பெற்றுக் கொண்ட கிராமமக்கள், அமைச்சருக்கும் அவரது அத்தைக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனா். மேலும் ஸ்ரீகண்டி கருப்பா் கோயிலில் வைத்து வழிபாடு செய்து காளைக்கு பட்டுத் துண்டு, பூமாலை, வேஷ்டிகள் அணியப்பட்டு, மேள, தாளத்துடன் கிராம வீதிகளில் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டது. வழி நெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து காளையை வரவேற்றனா். இந்நிகழ்ச்சியில் ஊா் பொதுமக்கள், அம்பலக்காரா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com