சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 296 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் க. பாஸ்கரன். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் உள்ளிட்டோா்.
சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் க. பாஸ்கரன். உடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் உள்ளிட்டோா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 296 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 296 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,33,734 மதிப்பீட்டில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா், மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள், நடைப்பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து, சிவகங்கை ஒன்றியம், ஆலங்குளம் ஊராட்சி, குட்டிதினி கிராமத்தில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சா் க. பாஸ்கரன் தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கலுவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலா் சரவணக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com