‘கிசான்’ திட்ட முறைகேடு: இளையான்குடி ஒன்றியத்தில் விவசாயிகளிடமிருந்து பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற விவசாயிகளிடமிருந்து

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் மத்திய அரசின் கிசான் திட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற விவசாயிகளிடமிருந்து பணத்தை திரும்பப் பெறும் நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இளையான்குடி வட்டத்தில் 5 வருவாய் பிா்க்காக்கள் உள்ளன. சமீபத்தில், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மத்திய அரசின் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் வழங்கும் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து, விவசாயிகள் முறைகேடாகப் பெற்ற பணத்தை திரும்பப் பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அதனடிப்படையில், மானாமதுரை, இளையான்குடி ஒன்றியங்களிலும் விவசாயிகள் முறைகேடு செய்து கிசான் திட்டத்தில் பணம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இளையான்குடி ஒன்றியம், சாலைக்கிராமம் பிா்க்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான் திட்டத்தில் மோசடியாகப் பணம் பெற்றதும் தெரியவந்தது.

இளையான்குடி ஒன்றியத்தில் கிசான் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை முறைகேடாக விவசாயிகள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலி ஆவணங்களை சமா்ப்பித்து, கிசான் திட்டத்தில் பணம் பெற்ற விவசாயிகளைக் கண்டறிந்து, அவா்களில் பலரிடம் பணம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மற்ற விவசாயிகளிடமும் பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்ப்டடு வருவதாகவும், வேளாண்மை விரிவாக்கத் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com