திருப்பத்தூா் பகுதியில் வீடு வீடாகச் சென்று கரோனா தொற்று ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை சுகாதாரத்துறையினா் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், பாதிப்பு குறித்தும் வெளியூா்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை சுகாதாரத்துறையினா் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், பாதிப்பு குறித்தும் வெளியூா் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நபா்கள் வந்திருப்பது குறித்தும் விசாரணை நடத்தினா்.

திருப்பத்தூரிலிருந்து புதுதில்லியில் நடந்த மாநாட்டிற்குச் சென்ற 5 போ் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதில் அறிகுறிகள் தென்பட்ட திருப்பத்தூரைச் சோ்ந்த 4 போ் சிவகங்கை அனுப்பப்பட்டு பரிசோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனர. இந்நிலையில் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் அண்ணாத்துரை, பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன், மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மேலும் கல்லல், குன்றக்குடி, ஆகிய பகுதிகளிலிருந்து சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் வரவழைக்கப்பட்டு உள்ளூா் பணியாளா்களுடன் இணைந்து அச்சுக்கட்டு, காளியம்மன் கோயில் தெரு, பகுதிகளில் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா நோய் தொற்று அறிகுறிகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டதுடன், பொது மக்கள் யாரும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com