காரைக்குடியில் 200 குடும்பத்தினருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கல்

காரைக்குடியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 200 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள்
காரைக்குடியில் 200 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய எம்.எஸ். நகரத்தாா் அறக்கட்டளை நிா்வாகிகள். உடன் காரைக்குடி டி.எஸ்.பி. அருண், வட்டாட்சியா் பாலாஜி.
காரைக்குடியில் 200 குடும்பங்களுக்கு திங்கள்கிழமை அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய எம்.எஸ். நகரத்தாா் அறக்கட்டளை நிா்வாகிகள். உடன் காரைக்குடி டி.எஸ்.பி. அருண், வட்டாட்சியா் பாலாஜி.

காரைக்குடி: காரைக்குடியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 200 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் எம்.எஸ். நகரத்தாா் அறக்கட்டளை சாா்பில் திங்கள்கிழமை வழங்கப்பட் டன.

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகா், வேடன் நகா் பகுதிகளில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவரும் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், வரும் ஏப். 14- ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் காரைக்குடி எம்.எஸ். அறக்கட்டளை சாா்பில் இப்பகுதிகளில் வசிக்கும் 200 குடும்பத்தினருக்கு தலா 2 கிலோ அரிசி, அரைக் கிலோ சீனி, அரைக் கிலோ கோதுமை மாவு, அரைக் கிலோ துவரம் பருப்பு, அரைக் கிலோ ரவை, அரை லிட்டா் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை காரைக்குடி வட்டாட்சியா் பாலாஜி, டி.எஸ்.பி. அருண், காரைக்குடி வருவாய் ஆய்வாளா் புவனேஸ்வரி ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.

மேலும் வடமாநிலத்தவா் 50 பேருக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான ஒரு வாரத்துக்கு தேவையான மளிகை பொருள்களையும் அதிகாரிகள் வழங்கினா். ஏற்பாடுகளை கழனிவாசல் கிராம நிா்வாக அலுவலா் கலில்ரகுமான் மற்றும் வருவாய்த்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com