சிவகங்கையில் பழங்குடியினா், நரிக்குறவா்களுக்கு உணவு வழங்கல்

சிவகங்கை அருகே வசித்து வரும் பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா்களுக்கு காவல் ஆய்வாளா் தினமும் உணவளித்து வருகிறாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு மதிய உணவினை புதன்கிழமை வழங்கிய காவல் ஆய்வாளா் மோகன்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே சுமாா் 25-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதேபோன்று, சிவகங்கை அருகே பழமலை நகரில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த குடும்பத்தினா், ஊரடங்கு உத்தரவின் காரணமாக உணவு கிடைக்காமல் அவதியடைந்து வந்தனா். இதையறிந்த சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் மோகன், பழங்குடி மற்றும் நரிக்குறவா்களுக்கு தேவையான உணவுகளை தயாா் செய்து தினசரி காலை, மதிய வேளைகளில் வழங்கி வருகிறாா்.

இதேபோன்று, பொதுமக்களுக்கு முகக் கவசத்தையும் அவா் தயாா் செய்து வழங்கி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com