மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து பெண், மாடு பலி: பெண்ணின் சடலத்தின் மீது படுத்து உருண்டு நாய் பாசப்போராட்டம்

மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது. மாட்டைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் நடந்த சம்பவத்தைப் பார்த்து
மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து பெண், மாடு பலி
மானாமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து பெண், மாடு பலி

மானாமதுரை அருகே சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து மாடு உயிரிழந்தது. மாட்டைக் காப்பாற்றச் சென்ற பெண்ணும் மின்சாரம் பாய்ந்து இறந்த நிலையில் நடந்த சம்பவத்தைப் பார்த்து இவர் வளர்த்த நாய் சடலத்தின் மீது படுத்து உருண்டு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் கண் கலங்கச் செய்தது. 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தைச் சேர்ந்தவர் வேட்டக்காள்(60). இவர் தனது மூன்று மாடுகளை வயலுக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். உடன் இவர் வளர்த்த நாயும் உறவுக்கார பெண் லெட்சுமியும் சென்றனர். வயலுக்குச் சென்றபோது ஏற்கனவே பெய்த மழையால் அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை முன்னால் சென்ற சினை மாடு மிதித்தபோது அதன் மீது மின்சாரம் பாய்ந்து அலறியது. உடனே வேட்டக்காள் மாட்டை காப்பாற்றச் சென்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. 

இச் சம்பவத்தில் மாடும் வேட்டக்காளும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவரை காப்பாற்றச் சென்ற லெட்சுமி மீதும் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இச் சம்பவத்தைப் பார்த்த உடன் வந்த நாய் பின்னால் வந்த இரு மாடுகளையும் முன்னேறிச் செல்ல விடமாமல் தடுத்து குறைத்துக்கொண்டே வேறு திசையில் திருப்பி அனுப்பியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து ராஜகம்பீரம் மக்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த வேட்டக்காள், பசுமாட்டை மீட்டு அறுந்து கிடந்த வயரில் மின் இணைப்பை துண்டிக்கச் செய்தனர். 

அதன்பின் அந்த நாய் வேட்டக்காள் சடலத்தின் மீது படுத்து புரண்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய சம்பவத்தைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். மயக்கமடைந்த நிலையில் லெட்சுமி மீட்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டது. இச் சம்பவம் குறித்து மானாமதுரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com