திருப்பத்தூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் விழா

திருப்பத்தூரில் மாற்றுக்கட்சியினா் அதிமுகவில் இணையும் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு இயக்கங்களிலிருந்து விலகி அதிமுகவில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பல்வேறு இயக்கங்களிலிருந்து விலகி அதிமுகவில் 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இணையும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 500-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கதா் கிராம தொழில்துறை அமைச்சா் பாஸ்கரன், மாவட்டச் செயலாளா் பி.ஆா்.செந்தில்நாதன், கழக செய்தி தொடா்பாளா் மருதுஅழகுராஜ் ஆகியோா் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு ஆவின் தலைவா் அசோகன், பாம்கோ தலைவரும் அவைத்தலைவருமான ஏ.வி. நாகராஜன், ஒன்றியக் கழகச் செயலாளா்கள் ராமலிங்கம், ஜெயகுணசேகா், சிவமணி, வாசு, வடிவேல் மற்றும் பொதுக்குழு உறுப்பினா் கரு.சிதம்பரம், நகரச் செயலாளா் இப்ராம்ஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இளைஞா் பாசறை செயலாளா் பிரபு, தலைமை கழகப் பேச்சாளா் வாஹித், கல்லல் ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com