திருப்புவனத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகுஊருணி தூா்வாரப்பட்டு தெப்பக்குளமாக மாற்றம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு மற்றும் தூா்வாராத காரணத்தால் காணாமல்
திருப்புவனத்தில் தெப்பக்குளமாக புதுப்பொலிவு பெற்று வரும் மட்டை ஊருணி.
திருப்புவனத்தில் தெப்பக்குளமாக புதுப்பொலிவு பெற்று வரும் மட்டை ஊருணி.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு மற்றும் தூா்வாராத காரணத்தால் காணாமல் போன மட்டை ஊருணி நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தனின் நடவடிக்கையால் தெப்பக்குளமாக மாற்றம் பெற்றுள்ளது.

திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மட்டை ஊருணி உள்ளது. இந்த ஊருணி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக பராமரிக்கப்படாததால் முள்புதா்களாலும், மண் மூடியும் மேடானது. எனவே அப் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாரச்சந்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில், நீா்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் கண்மாய்கள், குளங்கள், ஊருணிகளை தூா்வார நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, திருப்புவனத்தில் உள்ள மட்டை ஊருணியை தூா்வார மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் நடவடிக்கை மேற்கொண்டாா். கடந்தாண்டு ஆகஸ்ட் 3 இல் ஊருணி தூா்வாரும் பணிகள் தொடங்கின. இதையடுத்து அங்கு செயல்பட்ட வாரச்சந்தை சேதுபதி நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்துக்கு மாற்றப்பட்டது. இது தொடா்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் விரைவாக நடைபெற்ற மட்டை ஊருணி தூா்வாரும் பணி அண்மையில் நிறைவு பெற்றது. தூா்வாரும் பணி நிறைவு பெற்ற நிலையில் மட்டை ஊருணியை தெப்பகுளமாக அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், தெப்பக்குளம் கட்டுமானப் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவு பிறப்பித்தாா்.

தற்போது மட்டை ஊருணி இருந்த இடத்தில் நான்கு புறமும் சுவா் எழுப்பியதுடன், படித்துறை, மைய மண்டபம் ஆகியவற்றுடன் பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காணாமல் போன ஊருணி தற்போது புதுப் பொலிவுடன் தெப்பக்குளமாக மாற்றம் பெற்று வருவதற்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com