ஐயப்பன் கோயிலில் மாசி மாத பிறப்பு வழிபாடு

மானாமதுரை அண்ணா சிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாசி மாத பிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மானாமதுரை அண்ணா சிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாசி மாத பிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னா், மூலவா் தா்மசாஸ்தாவுக்கும், உற்சவருக்கும் பால், பன்னீா், திரவியப் பொடி, சந்தனம், விபூதி, இளநீா் உள்ளிட்ட பலவகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவா் வெள்ளிக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் கலந்துகொண்டு, தா்மசாஸ்தா ஐயப்பனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com