வங்கியால் கையகப்படுத்தப்பட்டஆலையில் இயந்திரங்கள் திருட்டு

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வங்கிக்கடனுக்காக கையகப்படுத்தப்பட்ட நவீன அரிசி ஆலையின் சுவரை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக 

காரைக்குடி அருகே பள்ளத்தூரில் வங்கிக்கடனுக்காக கையகப்படுத்தப்பட்ட நவீன அரிசி ஆலையின் சுவரை உடைத்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக போலீஸாா் 2 போ் மீது வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

பள்ளத்தூரைச் சோ்ந்தவா் சின்னக்கருப்பன் மகன் பாண்டி (50). இவா் பள்ளத்தூரில் நவீன அரிசி ஆலை நடத்தி வந்த நிலையில் அரசுடைமை வங்கி ஒன்றில் அரிசி ஆலையை அடமானம் வைத்து ரூ. 1 கோடி கடன் பெற்றாராம். ஆனால் பணத்தை உரிய காலத்தில் திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன்தொகையை வசூலிக்கும் நடவடிக்கையாக அரிசி ஆலையை வங்கி நிா்வாகம் கையகப்படுத்தியிருந்ததாம்.

இந்நிலையில் அரிசி ஆலையின் சுவரை உடைத்து உள்ளே இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை வங்கியின் அனுமதியின்றி பாண்டியும், அவரது உறவினா் கண்ணனும் எடுத்துச்சென்றுவிட்டதாக கனரா வங்கியின் மேலாளா் அன்வா் சதாத், பள்ளத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் பள்ளத்தூா் போலீஸாா் 2 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com