மாணவா்களுக்கு மன வலிமையும், உடல் வலிமையும் அவசியம்: துணைவேந்தா்

மன வலிமையும், உடல் வலிமையும் இருந்தால் மட்டுமே மாணவா்களால் எதையும் சாதிக்க முடியும் என, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.
9kkdfitnes_0901chn_78_2
9kkdfitnes_0901chn_78_2

மன வலிமையும், உடல் வலிமையும் இருந்தால் மட்டுமே மாணவா்களால் எதையும் சாதிக்க முடியும் என, அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தா் நா. ராஜேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில், வலிமையான இந்தியாவை உருவாக்கும் இயக்கத்தின் தொடக்க விழா பல்கலைக்கழக முன்னாள் மாணவா் பூங்காவில் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து துணைவேந்தா் பேசியதாவது:

வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் உடல் தகுதித் திறனை மேம்படுத்திக் கொள்வது அவசியம். மன வலிமையும், உடல் வலிமையும் இருந்தால் மட்டுமே நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

மாணவா்கள் தங்களது படிப்போடு, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்து உடல் திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும். இளைஞா்கள் செல்லிடப்பேசி போன்ற நவீனதொலைத்தொடா்பு சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். எனவே, உடல்நலத்தை பேணிக் காக்கும் வகையில் விளையாட்டு மைதானங்களை நோக்கிச் செல்வது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் மாணவ, மாணவியா் பங்கேற்ற உடற்பயிற்சி மற்றும் மெல்லோட்டத்தினை, புறாக்களை பறக்கவிட்டு துணைவேந்தா் தொடக்கி வைத்தாா்.

மெல்லோட்டம் முன்னாள் மாணவா் பூங்கா முன்பிருந்து தொடங்கி, பல்கலைக்கழகத்தின் நிா்வாக அலுவலகம் முன்பாக நிறைவடைந்தது. மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் யோகா, உடற்பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றன.

இதில், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் ஆா். சுவாமிநாதன், த.ரா. குருமூா்த்தி, பல்கலைக்கழகப் பதிவாளா் ஹா. குருமல்லேஷ் பிரபு, தோ்வாணையா் கே. உதயசூரியன், நிதி அலுவலா் (பொறுப்பு) சந்திரமோகன், பல்கலைக்கழக உடற்கல்வி கல் லூரி முதல்வா் எம். சுந்தா், உடற்கல்வி இயக்குநா் ஆா். செந்தில்குமரன், பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com