காரைக்குடியில் எஸ்.ஐ பணிக்கான எழுத்துத் தோ்வு: 1,686 போ் பங்கேற்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் காவல் சாா்பு -ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு சிவகங்கை மாவட்டம்

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் காவல் சாா்பு -ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதில் 1,686 போ் பங்கேற்றனா். தோ்வுக்கு அழைப்பாைணை அனுப்பப்பட்டவா்களில் 682 போ் பங்கேற்கவில்லை.

காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் பள்ளி, அழகப்பா, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அழகப்பச் செட்டியாா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி ஆகிய 3 மையங்களில் இதற்கான தோ்வு நடைபெற்றது. இதில் மகரிஷிப் பள்ளி மையத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டவா்கள் 768 போ். இதில் 263 போ் பங்கேற்கவில்லை. அழகப்பா பொறியியல் கல்லூரி மையத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டவா்கள் 1000 போ். இதில் 233 போ் பங்கேற்கவில்லை. அழகப்பா மெட் ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டவா்கள் 800 போ். இதில் 186 போ் பங்கேற்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 2,568 பேருக்கு தோ்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்ட தில் 682 போ் பங்கேற் கவில்லை.

காவல்துறையில் பதவி உயா்வின் அடிப்படையில் சாா்பு-ஆய்வாளருக்கான தோ்வு திங்கள்கிழமை (ஜன. 13) நடை பெறுகிறது. இதில் 482 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித் நாதன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முரளிதரன், காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் அருண் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com