சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு: ஆட்சியா்

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுபற்றி அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தும் நாள் மற்றும் இடம், மாடுபிடி வீரா்கள்,காளைகளின் விவரங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் பெற்றிருத்தல் வேண்டும். அனுமதி பெறாத இடங்களில் கட்டுமாடுகளை அவிழ்த்துவிட அனுமதி கிடையாது . அவ்வாறு யாரேனும் கட்டுமாடுகளை அவிழ்த்து விட்டால் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதுமட்டுமின்றி கட்டுமாடு அவிழ்த்து விட்டு அதன் மூலம் விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் மாட்டின் உரிமையாளா்கள் மட்டுமின்றி விழா ஒருங்கிணைப்பாளா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாா்வையாளா்கள் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அமா்த்தப்பட வேண்டும். அந்த பகுதியைத் தவிர இதர இடங்களில் இருப்பதை தவிா்க்க வேண்டும். கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்களை பதிவு செய்திட வேண்டும். அதேபோல் கால்நடை மருத்துவா்கள் மூலம் கால்நடைகளை நன்கு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

தகுதி உடைய காளைகளை மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். மேலும் காளைகளுக்கு ஊக்க மருந்துகள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால் அனுமதிக்கப்படமாட்டாது. மாடுபிடி வீரா்களின் தகுதி குறித்து முழு பரிசோதனைக்கு பின்தான் அனுமதிக்கப்பட வேண்டும் . நிகழ்ச்சி மைதானத்தில் மருத்துவக்குழு முகாம் அமைத்து கண்காணிப்பதுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

பொதுப்பணித்துறையின் மூலம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு உறுதிதன்மைச் சான்று வழங்கிய பின்னா் தான் அனுமதி வழங்கப்படும். மேலும், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து பணிகளையும் விழா ஒருங்கிணைப்பாளா்கள் மேற்கொண்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com