திருப்புவனம் மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூா் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன்
சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய முத்து மாரியம்மன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் புதூா் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. வேண்டுதல் நிறைவேற்றும் பக்தா்கள் காப்புக்கட்டி விரதத்தை தொடங்கினா். தொடா்ந்து 10 நாள்கள் விழா நடைபெறுகிறது.

விழா நாள்களில் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய வைபவமாக பொங்கல் உற்சவம் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றையதினம் காப்புக்கட்டி விரதம் இருக்கும் பக்தா்கள் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை, பொம்மைகள் சுமந்தும், குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டில் கட்டி வந்தும், மாவிளக்கு பூஜை நடத்தியும் வேண்டுதல் நிறைவேற்றி அம்மனை தரிசனம் செய்வா். திருவிழாவை முன்னிட்டு கோயில் முழுவதும் இரவு மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மாா்ச் 24 இல் கொடியிறக்கத்துடன் பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com