காரைக்குடியில் அத்தியாவசியப் பொருள்கள்வாங்க திரண்ட மக்கள்

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, செவ்வாய்க்கிழமை மாலை முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனா்.
காரைக்குடியில் ஐந்துவிளக்குப் பகுதியில் உள்ள தினசரி காய்கனி சந்தையில் செவ்வாய்க்கிழமை குவிந்த மக்கள்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பல்வேறு பகுதிகளிலும் திங்கள்கிழமை மாலை முதலே அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் திரண்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் ஐந்துவிளக்குப் பகுதியில் உள்ள காய்கனி தினசரி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. கோட்டையூா் ஸ்ரீராம்நகா் ரயில்வே கடவுப் பாதை பகுதியிலும் தற்காலிக காய்கறி விற்பனைக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

தடை உத்தரவை முன்னிட்டு, காரைக்குடி காவல் உட்கோட்ட பகுதியில் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com