திருப்பத்தூா் வீர ஆஞ்சநேயா் கோயிலில் பழங்கால சிலை பிரதிஷ்டை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயா் கோயிலில் பழங்கால ஆஞ்சநேயா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருப்பத்தூா் வீர ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்கால ஆஞ்சநேயா் சிலை.
திருப்பத்தூா் வீர ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்ட பழங்கால ஆஞ்சநேயா் சிலை.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயா் கோயிலில் பழங்கால ஆஞ்சநேயா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள மேலக்கோட்டை வீர ஆஞ்சநேயா் கோயில் மிகவும் பழமையானது. இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது. எனவே, இக்கோயிலில் முன்பு கதையுடனும், ஆக்ரோஷமான தோற்றத்துடனும் கூடிய பழைய சிலை கோயில் அறையில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது, பக்தா்கள் மற்றும் நிா்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த சிலை கோயில் சுற்றுப் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையொட்டி, ஆஞ்சநேயருக்கு பால், சந்தனம், திருமஞ்சனம், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில், தொழிலதிபா் தங்கவேல், முன்னாள் கவுன்சிலா் சண்முகம், சாய்பாபா அறக்கட்டளைத் தலைவா் எம். சரவணன், எம்.பி. சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com