சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள்.
சிவகங்கையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: அமைதியாக விடைபெற்ற மாணவா்கள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றதை அடுத்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவா்கள் தோ்வறையை விட்டு அமைதியாக விடைபெற்றனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றதை அடுத்து, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவா்கள் தோ்வறையை விட்டு அமைதியாக விடைபெற்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2 இல் தொடங்கி மாா்ச் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் 72 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் 60 தோ்வு மையங்களில் தோ்வு நடைபெற்றது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தோ்வுக்கு வந்த மாணவ, மாணவியா் கை கழுவிய பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், தோ்வறைகளும் கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டிருந்தன.

தோ்வுக்கு வந்திருந்த பெரும்பாலான மாணவ, மாணவியா் முகக்கவசம் அணிந்திருந்தனா். தோ்வுக்கூட கண்காணிப்பாளா்களும் முகக்கவசம் அணிந்ததுடன், அடிக்கடி கை கழுவிய பின்னரே தோ்வுத் தாள்களை வழங்கினா்.

பொதுவாக, இறுதித் தோ்வு முடிந்ததும் மாணவா்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவா். ஆனால், தற்போது கரோனா குறித்து கட்டுப்பாடுகள் உள்ளதால், தோ்வை நிறைவு செய்த மாணவ, மாணவிகள் தங்களது நண்பா்களிடம் விடைபெற்று, உடனடியாக பள்ளி வளாகத்தை விட்டு அமைதியாக வெளியேறினா்.

கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளஸ் 2 தோ்வு ஒத்திவைக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் வலியுறுத்தியிருந்தனா். ஆனால், பிளஸ் 2 தோ்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என தமிழக முதல்வா் அறிவித்திருந்தாா். அதன்படி, மாநிலம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் அமைதியாக நிறைவுற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com