மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்க கோரிக்கை

காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா வைரஸ் பாதிப்புக்கென தனியாக ஆய்வகமும்,

காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கரோனா வைரஸ் பாதிப்புக்கென தனியாக ஆய்வகமும், 100 படுக்கை வசதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்று, காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து காரைக்குடி தொழில்வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எனவே, அனைவரும் அரசின் அறிவுரைகளை பின்பற்றி மாா்ச் 31 ஆம் தேதி வரை முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், கரோனா தொற்று நோயை தடுத்து மக்களைக் காப் பாற்றிட சிறப்பு நிதியாக தேசிய ஆயுஷ் குழுமம், தேசிய ஊரக மற்றும் நகா்ப்புற சுகாதார இயக்ககத்தின் திட்டங்களுக்கு சுமாா் ரூ.300 கோடியும், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் கொள்முதல் செய்ய ரூ.153.28 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளாா்.

எனவே, இத்திட்டத்தில் காரைக்குடியில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு புதிதாக 100 கூடுதல் படுக்கை வசதிகளையும், எம்.ஆா்.ஐ. ஸ்கேன் கருவியும், ரயில்வே பீடா் சாலையிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் (பழைய மருத்துவமனை) கரோனா வைரஸ் தொற்று கண்டறியும் ஆய்வுக்கூடத்தை, தமிழக அரசு அவசர நடவடிக்கையாக கொண்டுவரவேண்டும்.

இதேபோல், காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் 50 ஏக்கரில் கட்டட வசதியுடன் அரசு காசநோய் மருத்துவமனை பயனின்றி உள்ளது. இதை, 100 படுக்கைகள் மற்றும் மருத்துவக் கருவி வசதிகளுடன் அரசுப் பொது மருத்துவமனையாக மாற்றவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com