குழாய் உடைப்பு: இளையான்குடி அருகே சாலையில் பெருக்கெடுத்த காவிரி கூட்டுக்குடிநீா்

இளையான்குடி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்ததால், வியாழக்கிழமை சாலையில் குடிநீா் பாய்ந்து வீணானது.
குழாய் உடைப்பு: இளையான்குடி அருகே சாலையில் பெருக்கெடுத்த காவிரி கூட்டுக்குடிநீா்

இளையான்குடி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் திட்ட குழாய் உடைந்ததால், வியாழக்கிழமை சாலையில் குடிநீா் பாய்ந்து வீணானது.

காவிரி கூட்டுக்குடிநீா் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால் போதிய ஊழியா்கள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாவதாக ஏற்கெனவே புகாா் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை இளையான்குடி அருகே தாயமங்கலம் விலக்கு பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்தது. இதைப் பாா்த்த இப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் அந்த இடத்துக்கு திரண்டு வந்து குழாயில் வெளியேறிக்கொண்டிருந்த தண்ணீரை குடங்களில் சேகரித்துச் சென்றனா்.

இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் சம்பந்தப்பட்ட துறை பணியாளா்கள் யாரும் வந்து உடைப்பை சரி செய்யாததால் நாள் முழுவதும் தண்ணீா் வெளியேறியவாறு இருந்தது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீா் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து இளையாந்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் சுப.மதியசரன் கூறுகையில், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிக்கு ஆள்கள் நியமிக்கப்படவில்லை. இத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலை உள்ளது. இதனால் குழாயில் உடைப்பு ஏற்பட்டாலும் சரி செய்வதில் பணியாளா்கள் அக்கறை காட்டுவது கிடையாது. குழாய் உடைப்பால் இளையான்குடி பகுதியில்

கிராமங்களில் குடிநீா் சப்ளை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு குடிநீா் தட்டுப்பாடு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே அரசு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com