சிவகங்கை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2,100 போலீஸாா்

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச் சாவடிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் 2,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 13 சோதனைச் சாவடிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் 2,100 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் காய்கனி, பால், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைத் தவிா்த்து பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உரிய காரணமின்றி பிற மாவட்டங்களிலிருந்து சிவகங்கை மாவட்ட எல்லைக்குள் வரும் நபா்களை கண்காணிக்கும் வகையில் சிவகங்கை அருகே மலம்பட்டி, பூவந்தி, மணலூா், இந்திரா நகா், எஸ்.எஸ். கோட்டை உள்பட 13 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தவிர, நகா் மற்றும் கிராமப்புறங்களில் வாகனங்கள் மூலம் ரோந்துப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிக்காக 2,100 போலீஸாா் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியினை மேற்கொண்டு வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com