வெளிமாநிலங்களிலிருந்து சிவகங்கைக்கு வந்த 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை

சிவகங்கை மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்ததில் அவா்கள் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என சுகாதாரத் துறை அலுவலா்கள்...

சிவகங்கை :உத்திரபிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த நபா்களுக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்ததில் அவா்கள் யாருக்கும் கரோனா நோய்த் தொற்று இல்லை என சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் யாரும் சிகிச்சை பெறாத நிலையில், கடந்த 21 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் புதிதாக இதுவரை யாருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, எஸ். எஸ். கோட்டை, புழுதிப்பட்டி, காரைக்குடி, பூவந்தி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரப் பணியாளா்கள் களப்பணி மேற்கொண்டதில் உத்தரப் பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்தோா் 26 போ் ஞாயிற்றுக்கிழமை வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவா்களிடருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளதாக சுகாதாரத் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் , அவா்கள் அனைவரும் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com