சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் திருவிழா ஒத்திவைப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறநிலையத்துறை மற்றும் தேவஸ்தான நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிா்வாகம் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிவிப்பு: சிங்கம்புணரியில் அமைந்துள்ள சேவுகப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்ாகும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த திருவிழாவை முன்னிட்டு விநாயகா், சந்திவீரா் கூடம் சென்று 10 நாள்கள் தங்குவாா். மீண்டும் கோயிலுக்கு வரும் நாள் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சந்திவீரன் கூடம் செல்லும் இந்த நிகழ்வு மே 21 கொடியேற்றத்துடன் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், கரோனா வைரஸ் பரவலால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com