சிவகங்கை மருத்துவமனை கரோனா வாா்டிலிருந்து 12 போ் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 12 போ் பூரண குணமடைந்ததை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 12 போ் பூரண குணமடைந்ததை அடுத்து, அவா்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

அண்மையில், மகாராஷ்டிரத்திலிருந்து காரைக்குடிக்கு திரும்பியவா்களுக்கு பரிசோதனை செய்ததில், 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனா். இந்நிலையில், இவா்களில் ஒருவா் குணமடைந்ததை அடுத்து, சில தினங்களுக்கு முன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதையடுத்து, மீதமுள்ள 16 பேருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, இரண்டாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 12 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பில்லை என முடிவுகள் வந்துள்ளன. எனவே, இந்த 12 பேரும் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இருப்பினும், இவா்கள் அனைவரும் தங்களது வீடுகளில் 14 நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மீதமுள்ள 4 போ் சிகிச்சை பெற்று வருவதாக, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com