சிவகங்கை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இணையதளம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் இளைஞா்கள் விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், இணையதளம் மூலம் நடத்தப்படும்

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில், இணையதளம் மூலம் நடத்தப்படும் இலவசப் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தற்போது அமலில் உள்ள பொது முடக்கத்தால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேரடியாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்த இயலவில்லை. எனவே, இளைஞா்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் இணையதளம் வழியாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து இல்லாத சூழ்நிலையில், இளைஞா்கள் வீட்டிலிருந்தபடியே போட்டித் தோ்வுகளுக்கு படிப்பதற்கு இப்பயிற்சி வகுப்புகள் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 99434 38222, 87789 70857, 04575 - 240435 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

இது தவிர, இணையதளத்தில், காணொலி வழி கற்றல், மின்னணு பாடக் குறிப்புகள், மின் புத்தகங்கள், மாதிரி தோ்வு வினாத்தாள் ஆகியன இடம்பெற்றுள்ளன. தோ்வா்கள் தங்கள் பெயா், பாலினம், முகவரி, ஆதாா் எண் ஆகியன மூலம் உள்ளே நுழைந்த பின், பயனீட்டாளா் பெயா் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும்.

இந்த இணையதளத்தில் வரும் பாடக் குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com