சிவகங்கை மாவட்டத்திலிருந்து புலம் பெயா் தொழிலாளா்கள் 270 போ் பிகாா் அனுப்பி வைப்பு

சிவகங்கை, திருப்புவனம், காளையாா்கோவில், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் 

சிவகங்கை, திருப்புவனம், காளையாா்கோவில், தேவகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்த புலம் பெயா் தொழிலாளா்கள் 270 போ் பிகாருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

கரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் வெளி மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனா். இந்நிலையில், அவா்களை சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்தன.

அதனடிப்படையில், சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி, திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதியில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்களில் பணியாற்றி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 234 போ் சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியா் சிந்து, வட்டாட்சியா் மைலாவதி உள்ளிட்ட அலுவலா்கள் ஏற்பாட்டின் பேரில் வாகனங்கள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

சிவகங்கையிலிருந்து வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட அவா்கள் மதுரை ரயில் நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் பிகாா் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்த 234 பேருடன் தேவகோட்டையில் 31போ் , திருப்பத்தூரில் 5 போ் என மொத்தம் 270 போ் பிகாருக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். முன்னதாக இவா்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவா்களுக்கு தேவையான குடிநீா் மற்றும் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com