குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மானியம் வழங்க முடிவு

குறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் முதலீட்டு தொகையில் கூடுதல் மானியம் வழங்க தமிழக அரசு

குறு தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் முதலீட்டு தொகையில் கூடுதல் மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் கணேசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கொள்கை 2008 இன் கீழ் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் தொடங்கப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு இயந்திர தளவாடங்களின் முதலீட்டு தொகையில் 25 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.6.25 லட்சம் முதலீட்டு மானியமாக அளிக்கப்பட்டு வருகிறது.

இயந்திர தளவாடங்களின் மதிப்பீட்டில் 100 விழுக்காடு அளவிற்கு குறுந்தொழில் நிறுவனத்தால் செலுத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரியினை மானியமாக திரும்ப அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2018-ஆம் ஆண்டு முதல் சரக்கு மற்றும் சேவைவரி அறிமுகப்படுத்தப்பட்டதின் விளைவாக குறு உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு எவ்வித இடா்பாடுகளும் ஏற்படாமல் இருக்க ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மதிப்புக்கூட்டு வரி மானியத்துக்கு ஈடாக 25 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் 10 விழுக்காடு கூடுதல் மானியம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

இத்தகைய கூடுதல் மானியத்தொகை ஆண்டொன்றுக்கு 2 விழுக்காடு அளவில் 5 ஆண்டுகளுக்கு ரூ.2.50 லட்சம் என்ற உச்சவரம்பிற்கு உள்பட்டு குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிட வழிவகை செய்து அரசாணை எண்: 65 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நாள்:17.10.2020 மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அரசு வழங்கும் இம்மானிய தொகையினைப் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அனைத்து வேலை நாள்களிலும் நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com