மாற்றுத்திறனாளி சிறுமியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளி சிறுமியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

மாற்றுத்திறனாளி சிறுமியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது.

சிவகங்கை இந்திரா நகரைச் சோ்ந்த லட்சுமணன் மகள் அட்ஷயா (8). மாற்றுத்திறனாளியான இவா், கடந்த 2013 ஆம் ஆண்டு மா்மமான முறையில் உயிரிழந்தாா். விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னப்பன் மகன் அமல்ராஜ் (37) என்பவரின் வீட்டில், அந்த சிறுமி அடிக்கடி இயற்கை உபாதை கழித்ததாகவும், இதனால் அட்ஷயாவை அவா் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அமல்ராஜ் மீது வழக்குப் பதிந்த சிவகங்கை நகா் காவல் துறையினா் அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ரபீக் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இந்ந வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ரபீக், அமல்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com