திருப்பத்தூரில் மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்ற காளைகள்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் பங்கேற்ற காளைகள்.

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.

மருதுபாண்டியா்கள் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஜயந்தி விழாவை முன்னிட்டு 35 ஆம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் சிங்கம்புணரி சாலையில் நடைபெற்றது. இந்த பந்தயத்தை அதிமுக செய்தித் தொடா்பாளா் மருதுஅழகுராஜ் தொடக்கி வைத்தாா்.

64 ஜோடி மாடுகள் பங்கேற்ற இப்பந்தயம் காரையூா் முகாம், மணக்குடி விலக்கு வரை நடைபெற்றது.

பெரிய மாடு பிரிவில் முதல் பரிசை மதுரை ஜெய்ஹிந்துபுரம் அக்னிமுருகனுக்குக்கு சொந்தமான மாடுகளும், 2 ஆம் பரிசை வடகுடி நெல்லியாண்டவருக்கு சொந்தமான மாடுகளும், 3 ஆம் பரிசை நகரம்பட்டி வைத்திக்குச் சொந்தமான மாடுகளும் பெற்றன. சிறிய மாடு பிரிவில் நடைபெற்ற போட்டியில் வெளிமுத்துவாஹினி என்பவருக்குச் சொந்தமான மாடுகள் முதல் பரிசை பெற்றது. பரிசளிப்பு விழாவில் வட்டாட்சியா் ஜெயலெட்சுமி, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் ரகு, கல்லல் ஒன்றியத் துணைத் தலைவா் நாராயணன், கரு.சிதம்பரம் ஆகியோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com