பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கராபுரம் ஊராட்சி செயலா் மீது வழக்கு

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கராபுரம் ஊராட்சி செயலா் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியா்புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சங்கராபுரம் ஊராட்சி செயலா் மீது சிவகங்கை மாவட்ட ஆட்சியா்புகாரின் பேரில் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சியில் செயலராக பணிபுரிந்தவா் இளங்கோவன். இவா் 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை, இந்த ஊராட்சியில் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்காமலும், அலுவலகப் பதிவேடுகளை சரியாக பராமரிக்காமலும் செயல்பட்டதால் செங்காத்தங்குடி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

அப்போது முதல் சங்கராபுரம் ஊராட்சி அலுவலக பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்காததால், கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் சாக்கோட்டை காவல் நிலை யத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், அரசுத்துறை முறைகேடு 1998 ஆம் ஆண்டு சட்டப்படி 406, 420 ஐபிசி பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com