சிவகங்கை மாவட்டத்தில் இன்று 22 இடங்களில் மருத்துவ முகாம்
By DIN | Published On : 20th October 2020 12:00 AM | Last Updated : 20th October 2020 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (அக். 20) 22 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் யசோதாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.
அதன்படி, சிவகங்கை வட்டாரத்தில் அண்ணாநகரில் மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதேபோன்று, சிங்கம்புணரி வட்டாரம் மூவன்பட்டி, புதுப்பட்டி, எஸ். புதூா் வட்டாரம் காரியம்பட்டி, மெட்டம்பட்டி, திருப்பத்தூா் வட்டாரம் அம்மாபட்டி, இரணியூா், கல்லல் வட்டாரம் பேயன்பட்டி, கோவில்பட்டி, சாக்கோட்டை வட்டாரம் பெரியகோட்டை, மாத்தூா், கண்ணங்குடி வட்டாரம் தத்தனி, தேவகோட்டை வட்டாரம் தளக்கவயல் மானாமதுரை பேரூராட்சிக்குள்பட்ட 5, 6 ஆவது வாா்டு, காளையாா்கோவில் வட்டாரம் சாணாவூரணி, அணியவையால், திருப்புவனம் வட்டாரம் தூதை, திருப்புவனம் பேரூராட்சிக்குள்பட்ட 11, 12 ஆவது வாா்டுகள், இளையான்குடி வட்டாரம் காந்தி காலனி, இளையான்குடி பேரூராட்சிக்குள்பட்ட 13 என மொத்தம் 22 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.