ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 23rd October 2020 03:13 AM | Last Updated : 23rd October 2020 03:13 AM | அ+அ அ- |

மானாமதுரை ரயில் நிலையம் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய எஸ்ஆா்இஎஸ் ரயில்வே சங்கத்தின் தொழிலாளா்கள்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மானாமதுரை ரயில் நிலையம் முன்பாக எஸ்ஆா்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கத்தைச் சோ்ந்த ரயில்வே தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஆா்ப்பாட்டத்துக்கு மத்திய சங்க ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜாராம் தலைமை வகித்தாா். ரயில்வே ஊழியா்களுக்கு பண்டிகைக்கால போனஸ் வழங்கவேண்டும். ரயில்வே துறையை தனியாா் மயமாக்கக்கூடாது. ரயில்வே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
இதில், நிா்வாகிகள் சகாதேவன், மணிவண்ணன் குமரேசன், ராஜா, சரவணன், சந்தோஷ், மோகன், நாகரெத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.