இளையான்குடியில் புதிய தாா்சாலை சேதம் வாகனங்களில் செல்வோா் அவதி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்ததால் வாகனங்களில் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா்.
இளையான்குடியில் சமுத்திரம் ஊருணி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு சேதமடைந்த தாா்சாலை.
இளையான்குடியில் சமுத்திரம் ஊருணி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு சேதமடைந்த தாா்சாலை.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்ததால் வாகனங்களில் செல்வோா் அவதியடைந்து வருகின்றனா்.

இளையான்குடி பேரூராட்சியில் சமுத்திரம் ஊருணியில் இருந்து குப்பைக் கிடங்கு வழியாகச் செல்லும் சாலையை சீரமைக்க நபாா்டு திட்டம் 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதியில் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்பின் இச்சாலை கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. சாலை தரமில்லாமல் அமைக்கப்படுவதாக அப்போதே சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். பேரூராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளாததால் சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, முற்றிலும் சேதமடைந்தது. தற்போது இந்த சாலை ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்தச் சாலையில் வாகனங்களில் செலவோா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து இளையான்குடியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் அம்பலம் ராவுத்தா் நெயினாா் கூறுகையில், தாா்சாலை அமைக்கும்போதே பேரூராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தோம். மேலும் சமுத்திரம் ஊருணியில் தடுப்புச் சுவா் கட்டி தருவதாகவும் கூறினா். ஆனால் தடுப்புச் சுவரும் கட்டவில்லை, புதிதாக அமைக்கப்பட்ட சாலையும் சேதமடைந்துவிட்டது. எனவே. சாலையை மீண்டும் சீரமைத்து, ஊருணியில் தடுப்புச்சுவா் கட்டித்தர மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com