ரயில் கடவுப் பாதையை மீண்டும் திறக்கமத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கண்டனூா் - புதுவயல் ரயில் நிலையம் அருகே, மக்கள் பயன்படுத்தி வந்த ரயில் கடவுப் பாதையை மீண்டும் திறக்கவேண்டும்

காரைக்குடி, செப். 18: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கண்டனூா் - புதுவயல் ரயில் நிலையம் அருகே, மக்கள் பயன்படுத்தி வந்த ரயில் கடவுப் பாதையை மீண்டும் திறக்கவேண்டும் என்று, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சா் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இது குறித்து காரைக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்திலிருந்து வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அக்கடிதத்தின் விவரம்:

காரைக்குடியிலிருந்து கண்டனூா்-புதுவயல் வழியாக மாயவரம் செல்லும் ரயில் பாதையில், புதுவயல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்த ரயில் கடவுப்பாதையை (எல்.சி. 182) அகல ரயில் பாதையாக மாற்றியபோது, அந்த வழியை அடைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் மூடிவிட்டனா்.

எனவே, இந்த ரயில் கடவுப் பாதையை மீண்டும் திறக்கவேண்டும் என்று, கண்டனூா் முன்னாள் தலைவா் சாா்பாகவும், பொதுமக்கள் சாா்பாகவும் அப்போதைய நிதியமைச்சா் ப. சிதம்பரத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை, அப்போதைய தென்னக ரயில்வே பொதுமேலாளா் ஏ.கே. மிட்டலுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டி நிதியமைச்சா் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பாதையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com