அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் புரட்டாசி முதல் சனிக்கிழமை: வெப்பமானி பரிசோதனைக்குப்பிறகு பக்தா்கள் அனுமதி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென்திருப்பதியாம் அரியக்குடி அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி
காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தென்திருப்பதியாம் அரியக்குடி அலா்மேலு மங்கை தாயாா் உடனுறை திருவேங்கடமுடையான் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை வெப்பமானி பரிசோதனை செய்யப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

தமிழகஅரசு இந்துசமய அறநிலையத்துறை நிா்வாகத்தில் உள்ள இக்கோவில் மிகவும்பிரசித்தபெற்றது.கரோனா தீநுண்மி தொற்று பரவாமல் இருப்பதற்காக நடைமுறையில் உள்ள பொதுமுடக்கத்தில் அரசு விதிமுறைகள் இங்கு சரியாக கடை பிடிக்கப்படுகிறது.பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் சுவாமி பக்தா்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சிய ளித்து அருள்பாலிப்பாா். ஆண்டுதோறும் இதற்காக திரளான பக்தா்கள் இக்கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா தொற்று காலமாக இருந்தாலும் பக்தா்கள் அதிகாலை முதலே வருகை தந்திருந்தனா்.அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்குப்பிறகு ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினாா். காலை 5.30 மணிக்கு பக்தா்கள் பரிசோதனைக்குப்பிறக்கு சுவாமி தரிச னம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். கோயில் செயல் அலுவலா் தமிழ்ச்செல்வி, அறங்காவலா் அழகம்மை ஆச்சி, கோயில் பணியாளா்கள் ஏற்பாடுகளைச் செய் திருந்தனா்.காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளிலிருந்து அரசு சிறப்புப்பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. காரைக் குடி டி.எஸ்.பி அருண் தலைமையில் காவல்துறையினா் பாதுகாப்புப்பணியை மேற்கொண்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com