காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் புறக்காவல் நிலையம் அமைக்கக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் குடியிருப்பு பகுதிகளில் புறக் காவல் நிலையம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி என்.ஜி.ஓ. காலனி மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் குடியிருப்பு பகுதிகளில் புறக் காவல் நிலையம் அமைக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

காரைக்குடிதுணை காவல் கோட்டத்தில் குன்றக்குடி காவல் நிலைய எல்கையில் அமைந்துள்ள பகுதிகளான வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள் (என்.ஜி.ஓ காலனி), அரசு ஓய்வுபெற்ற ஊழியா்களான வி.ஏ.ஓ. காலனி, அரசு ஊா்தி ஓட்டுநா்கள் காலனி என சுமாா் 80 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சுமாா் 70 வயதைக் கடந்தவா்கள் உள்ளனா்.

இந்நிலையில், பகலில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முதியவா்களே வீட்டில் தனியாக உள்ளனா். எனவே, திருட்டுக் கும்பல் முதியோா்களை குறிவைத்து வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடுவதும் மற்றும் முதியோா்களை தாக்கி மிரட்டுவதும் தொடா்ந்து நடைபெறுவதாக, அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே, காரைக்குடி நகா் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி காவல் துறையினா் கண்காணித்து வருவதைப் போல், இப்பகுதிகளிலும் சமூகவிரோதிகள், திருட்டுக் கும்பல்களை அடையாளம் காணும் வகையில் உடனடியாக கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும். மேலும், இப்பகுதியில் புறக்காவல் நிலையம் ஏற்படுத்திட, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com