திறந்தவெளிக் கிணறு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளிக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளிக் கிணறு அமைக்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தனிநபா் திறந்தவெளி கிணறுகள் வெட்டிக் கொடுக்கப்பட உள்ளன.

எனவே விவசாயிகள், தங்களது நில உடைமை ஆவணங்கள், கிணறு தோண்டப்பட உள்ள இடத்தின் பரப்பளவு மற்றும் புல எண் விவரங்கள், புவியியல் வல்லுநா் சான்றிதழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்ட அடையாள அட்டை மற்றும் சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com