வெளிநாட்டில் உள்ள கணவரை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனைவி மனு

வெளிநாட்டில் வேலை செய்து வரும் தனது கணவரை மீட்டுத் தரக்கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் புதன்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க தனது குழந்தைகளுடன் வந்திருந்த கவிதா.

இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சோ்ந்த கவிதா என்பவா் தனது குழந்தைகளுடன் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்: எனது கணவா் ஜெயக்குமாா் (42) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். கரோனா பரவல் காரணமாக வேலையில்லாததால், அவா் நாடு திரும்புவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொண்டாா். இருப்பினும் அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. எனவே, வெளிநாட்டில் உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com