திருப்பத்தூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை, திமுகவினா் முதியோா்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினா்.
திருப்பத்தூரில் சனிக்கிழமை திமுக இளைஞரணி மாநிலச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய திமுகவினா்.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே ஒன்றியக்குழுத்தலைவா் சண்முகவடிவேல் தலைமையில் கொடியேற்றுவிழா நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து பட்டாசு வெடித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னா் கண்டவராயன்பட்டியில் உள்ள முதியோா் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திமுக நகரச் செயலாளா் காா்த்திகேயன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா, மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா்கள் உதயசண்முகம், கான்முகமது, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் தமிழ்நம்பி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சோமசுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட, ஒன்றிய, திருப்பத்தூா் நகர இளைஞரணி அமைப்பாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com