சிவகங்கையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பேரவைக் கூட்டம்

சிவகங்கையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சிவகங்கை மாவட்டத் தலைவா் முத்துராமலிங்க பூபதி தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு, மாநில பொதுச் செயலா் சாமுவேல் ராஜ் , மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வீரபாண்டி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், சிவகங்கை மாவட்டத்தில் அடக்குமுறையால் பாதிப்புக்குள்ளான ஆதிதிராவிடா் மக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆதிதிராவிடா் நலத்துறை வழியாக ஆதிதிராவிடா் குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டாக்களை நில அளவை செய்து உரிய நபரிடம் ஒப்படைக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com